(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருஜெயசூரியவே என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும்  பாராளுமன்றத்தில் உறுதிபட தெரிவித்தன.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவுக்காத சபாநாயகர் கரு ஜெயசூரிய சிரித்தவாறு சபையை நடத்தினர். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான தயாசிறி ஜெயசேகரவும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி.யான தினேஷ் குணவர்தன ஆகியேரே மேற்கண்டவாறு கூறினர். 

இதன்போது அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரோ இந்த நாட்டின் ஜனாதிபதி கரு ஜெயசூரிய என்பதனை ஏறுக்கொண்டுவிட்டார்  எனக் கூறினார்.