(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு நானும் உடன் படுகின்றேன். அதனடிப்படையிலே இந்த பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.