மலேசியாவில் சுமார் 2 ஆயிரத்து  500 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பல பகுதிகளிலும் நிலவும் புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

இதன்காரணமாக 1.7 மில்லியனுக்கு அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே சிலாங்கூர் மாநிலத்தில் 538 பாடசாலைகளும், சராவாக் மாநிலத்தில் 337 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், பேராக்கில் 303 பாடசாலைகளும், பினாங்கில் 162 பாடசாலைகளும், கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள திகதி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.