புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள்  இன்று (19.09.2019) நள்ளிரவு முதல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத ஓட்டுனர்கள், கட்டுப்பாட்டளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.