முல்லைத்தீவு கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் நிலவும்; கடும் வறட்சி காரணமாக குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்வதாக மாதிரிக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

Image result for கேப்பாப்புலவு

.முல்லைத்தீவு கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் நிலவும் தொடர் வறட்சி காரணமாக மாதிரிக்கிராமத்தில் வாழும் மக்கள் தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதாவது, இப்பகுதியில் குடிநீரத்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அமைத்து வழங்கப்பட்டுள்ள பத்திற்கும் மேற்பட்ட பொதுக்கிணறுகளில் ஒரு சில கிணறுகளை தவிர ஏனைய கிணறுகள் நீரின்றி வரண்டு காணப்படுகின்றன. இவ்வாறு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரவிததுள்ளனர்.

தமது சொந்த இடத்தில் எந்த காலத்திலும் இவ்வறு தண்ணீர் வசதிகள் இல்லாமல் போவதில்லை ஆனால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் இருக்கின்ற ஒரு சில கிணறுகளிலும் 30 அடி ஆளத்திற்கும் அதிக ஆழத்திலேயே தண்ணீர் காணப்படுவதாகவும் இவ்வாறு தமது வீடுகளில் உள்ள பயன்தருமரங்கள் கூடதண்ணீர் இன்றி அழியும் அபாயநிலை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.