தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘எம்ஜிஆர் மகன்’ என பெயரிடப்படவிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் அடுத்ததாக இரண்டு திரைப்படங்களை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் விஜயசேதுபதி நடிக்கும் படமொன்றை பொன்ராம் இயக்குகிறார். 

இதற்கு முன்னதாக சசிகுமார் ,சத்யராஜ் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் பொன்ராம். நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் அந்தப் படத்திற்கு ‘எம்ஜிஆர் மகன்’ என பெயரிடப்படவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சசிகுமார் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட, கென்னடி கிளப் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் ‘நாடோடிகள்=2’ படத்தின் ஒடியோ  இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சசிகுமார் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘நாடோடிகள் 2’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதனிடையே நடிகர் சசிகுமார் கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நா நா, பரமகுரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.