சிங்­கப்­பூ­ரி­­லுள்ள வசிக்கும் நபரொருவருக்கு ஸிகா வைரஸ் கண்­ட­றிப்பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

பிரேஸிலி­ருந்­துருந்து சிங்கப்பூர் திரும்பிய பயணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதனால் சிங்கப்பூர் முழுவதும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு ஸிகா வைரஸை பரப்பும் நுளம்­பு­களை அழிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 

மேலும்,அண்டை நாடான மலேஷியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.