பசுவொன்றைத் திருடிய வர்ணம் தீட்டி இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த இளைஞனைக் கைது செய்யப்பட்டதுடன் குறிப்பிட்ட பசுவையும் மொனராகலைப் பொலிசார் மீட்டனர்.

மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து விரைந்த பொலிசார்மொனராகலைப் பகுதியின் பக்கினிகாவெலை என்ற இடத்தில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடையொன்றிலிருந்து குறித்த வர்ணம் தீட்டப்பட்ட பசுவை மீட்டனர். 

இந்நிலையில்  குறித்த பசுவின் உடலில் இடைக்கிடையே இருந்த வெள்ளை நிறம் கறுப்பு வர்ணங்களால் தீட்டப்பட்டே விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது பசுவின் உரிமையாளர் மொனராகலைப் பொலிசாருக்கு வழங்கிய புகாரில் தமது பசுவின் பெறுமதி எழுபத்தையாயிரம் ரூபாவென்றும் அதன் அடையாளங்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுவின் உரிமையாளருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து அங்கு விரைந்த பசு உரிமையாளர் தமது பசுவைப் பசுவின் நெற்றியிலுள்ள அடையாளத்தை முன்னிலைப்படுத்தி தமது பசுவென்பதையும் பசுவின் உடம்பெங்கும் வர்ணம் தீட்டப்பட்டிருப்பதையும் கண்டு பொலிசாருக்கு மீண்டும் அறிவித்தார்.

இதையடுத்து பொலிசார் விரைந்து குறித்த பசுவை மீட்டதுடன் பசுவைத் திருடிய இளைஞரையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.