மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து அமெ­ரிக்காவை சென்­ற­டையும் முக­மாக தனது மக­னுடன் ஆற்றை நீந்திக் கடக்க முயற்­சித்த  ஹொண்­டூ­ரஸைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர்  இரண்டு வயது மகன் சகிதம் ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார்.

கடந்த வார மத்­தியில் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து அமெ­ரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாது­காப்பு அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

ஐடா­லியா ஹெர்­றியா  என்ற மேற்­படி பெண் தனது கைக்­கு­ழந்­தை­யான மகன் சகிதம் றியோ கிரான்ட் ஆற்றைக் கடக்க முயற்­சித்தபோதே மேற்­படி விப­ரீத சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

வட மெக்­ஸிக்­கோ­வி­லுள்ள மத­மோரஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள  குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்­கான முகாமில் தங்­கி­யி­ருந்த அந்தப் பெண் தனது கண­வரும் இரு மகள்­மாரும் ஏற்­க­னவே  அமெ­ரிக்­காவை சென்­ற­டைந்­துள்ள நிலையில் அவர்­க­ளுடன் மீள இணைந்து கொள்­வ­தற்கு எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அவரை அணு­கிய ஹொண்­டூரஸ் பிர­ஜை­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று அவ­ருக்கு எல்லை நக­ரான மத­மோ­ர­ஸி­லுள்ள முகா­மி­லி­ருந்து அமெ­ரிக்க  எல்­லைக்­கான  360 மைல் பய­ணத்தை  மேற்­கொள்ள ஊக்­கு­வித்­தது.

இந்­நி­லையில் அந்த முகா­மி­லி­ருந்த மத்­திய அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஏனைய குடி­யேற்­ற­வா­சிகள்  மேற்­படி ஆபத்து மிக்க  பய­ணத்தைக் கைவி­டு­மாறு  ஐடா­லி­யா­வுக்கு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். ஆற்றைக் கடக்கும் இந்த ஆபத்துமிக்க பய­ணத்தின் போது கடலில் மூழ்கி உயி­ரி­ழக்­கவும் அதி­கா­ரி­களால் பிடிக்­கப்­பட்டு மீளவும் மெக்­ஸிக்­கோ­வுக்கு திருப்பி அனுப்­பப்­ப­டவும் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக அவர்கள்  ஐடா­லி­யா­வுக்கு எச்­ச­ரித்­தி­ருந்­த­னர்.

ஆனால் ஐடா­லி­யாவோ பய­ணத்தை மேற்­கொள்­வதில் தீவி­ர­மாக இருந்­துள்ளார். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி அமெ­ரிக்கா செல்லும் முக­மாக தனது சின்­னஞ்­சிறு மக­ளுடன் றியோ கிரான்ட் ஆற்றைக் கடக்க முயற்­சித்த  சல்­வோ­டோரைச் சேர்ந்த 25 வய­தான தந்தை மக­ளுடன் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வ தற்காக றியோ கிரான்ட் ஆற்றைக் கடக் கும் முயற்சியின்போது குறைந்தது 35 குடி யேற்றவாசிகள் பலியாகியுள்ளனர்.