ஒரே திசையில் பயணித்த இரு முச்சக்கரவண்டிகளில் ஒரு முச்சக்கரவண்டி மற்றயதை முந்திச்செல்ல முயற்சிக்கையில் குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி விபத்து இன்று காலை வெலிமடை பொரலந்த என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின்  சாரதியான பொரலந்தையைச் சேர்ந்த ஜி.ஏ.சம்பத் என்ற 19 வயது  இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலம் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  குறித்த விபத்து தொடர்பில் போகாகும்பர பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மற்றைய முச்சக்கரவண்டியன் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளார்.