சவுதி அரசாங்கம் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் அபிவிருத்திக்கென  சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைக் கடன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று (18.09.2019) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வில் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. காலித் சுலைமான் அல் ஹுதைரி, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹார்தி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி. சமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சப்ராகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தோடு, 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .