இந்­தோ­னே­சி­யாவில் வேக­மாக பரவி வரும் காட்டுத் தீயால் வெளிப்­பட்ட புகை  அயல்­நா­டு­க­ளான மலே­சியா மற்றும் சிங்­கப்பூர்வரை பரவி வரு­கின்ற நிலையில்  அந்தக் காட்டுத் தீயை அணைப்­ப­தற்கு  இந்­தோ­னே­சி­யா­வுக்கு கடும் அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி காட்டுத் தீயை அணைப்­ப­தற்கு இயன்ற அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் தாம் மேற்­கொண்­டுள்­ள­தாக  இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி ஜொகோ விடோடோ தெரி­வித்தார்.

சுமாத்­ராவில் காட்டுத் தீயால் மோச­மாக பாதிக்­கப்­பட்ட றியவு மாகா­ணத்­திற்கு  நேரில் விஜயம் செய்து நிலை­மை­களைப் பார்­வை­யிட்டபோதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இந்­தோ­னே­சிய பொர்­னியோ மற்றும் சுமாத்ரா தீவு­களில் வேக­மாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் நட­வ­டிக்­கையில் தீய­ணைப்பு விமா­னங்கள் மற்றும் செயற்கை மழை என்­ப­ன­வற்றின் உத­வி­யுடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தீய­ணைப்­புப்­ப­டை­வீ­ரர்கள் போராடி வரு­கின்­றனர்.

தீய­ணைப்பு நட­வ­டி­க்கையின் பொருட்டு தீ பரவி வரும் பிர­தே­சங்­க­ளுக்கு சுமார் 6,000 படை­வீ­ரர்கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக ஜொகோ விடோடோ  தெரி­வித்தார்.

அத்­துடன் இந்தத் தீயைக் கட்­டுப்­ப­டுத்த இறை­ய­ருளை வேண்டி பிரார்த்­த­னை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.