(எம்.எப்.எம்.பஸீர்)
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்தரிக்க, விஷேட வலையமைப்பு ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியுள்ள வட்ஸ்அப், வைபர் மற்றும் டெலிகிராம் தகவல்களை சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச பொலிஸார் மற்றும் சர்வதேச விசாரணை அமைப்புக்களின் உதவியுடன் அந்த தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதன் ஊடாக பயங்கரவாதிகளின் ஏனைய திட்டங்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் கோட்டை நீதிவானுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திசிங்க இதனை நீதிவானுக்கு விஷேட அறிக்கை ஊடாக அறிவித்தார். இந்நிலையில் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்தரிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர் அஹமது மொஹமது அர்ஷாத்தின் விளக்கமறியலை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீதிவான் நீடித்தார்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் விவகார விசாரணைகளின்போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அஹமது முஹம்மது அர்ஷாத் எனும் குறித்த சந்தேக நபர், தற்போதும் சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் உறுப்பினர் பஸ்ஹுல் சஹ்ரான் எனும் சந்தேகநபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதலாக சித்தரிக்க, யாரும் ஊடறுத்து கேட்க முடியாத விசேட வலையமைப்பொன்றின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சி.ஐ.டி.யினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் காத்தான்குடி பகுதியில் வைத்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் கையளித்துள்ளனர். அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் விசேட வலையமைப்பு ஊடாக ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புடன் தொட ர்புகளைக் கொண்டிருந்துள்ளமை வெளிப் படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் அறி க்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM