கொலைக்குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடு ரொசான் உள்ளிட்ட 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு கிராண்ட்பாஸ், மாதம்பிட்டி பகுதியில் ஆணமாலு ரங்க மற்றுமொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குடு ரொசான் உள்ளிட்ட 7 பேரையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையிலேயே குறித்த 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், குறித்த 7 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.