இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இன்று காலை முதல் கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி காலி உட்பட  தூர இடங்களுக்கான அனைத்து சேவைகளும் இடம்பெற்றதுடன் உள்ளுர் சேவைகளும் வழமை போன்று இடம்பெற்றன.

ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.