தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். 

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஏரம்பு இரத்தினவடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கொடிகாம பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.