இலங்­கையின் முன்னாள் விமா­னப்­படை மற்றும் கடற்­படைத் தள­ப­திக­ளுக்கு உயர் கௌரவ பதவி நிலை­களை அளிக்கும் நிகழ்வு இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இறு­திக்­கட்டப் போர்க்­கா­லத்தில் இலங்கை கடற்­படைத் தள­ப­தி­யாக பணி­யாற்­றிய அட்­மிரல் வசந்த கரன்­னா­கொட, அட்­மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமா­னப்­படைத் தள­ப­தி­யாக பணி­யாற்­றிய எயார் சீவ் மார்ஷல் றொஷான் குண­தி­லக, மார்ஷல் ஒவ் த எயார்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பத­வி­நி­லை­க­ளுக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­பட்ட பீல்ட் மார்ஷல் பத­விக்கு இணை­யான பதவி நிலை­க­ளாக இவை உள்­ளன.

இதற்­கான வர்த்­த­மானி அறி­விப்பு ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில், இந்த உயர் கௌரவ பதவி நிலை­களை அளிக்கும்  நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு கிழக்கு கொள்­கலன் முனை­யத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இரண்டு முன்னாள் படைத் தளபதிக ளுக்கும் உயர் பதவிநிலைகளை வழங்குவார்.