பத­விக்­காலம் எப்­போது தொடங்கி முடிகிறது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கேட்க தயாராகிறார் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

19 Sep, 2019 | 10:29 AM
image

(ரொபட் அன்­டனி)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   தனது  ஜனா­தி­பதி பத­விக்­காலம்  எப்­போது  தொடங்கி எப்­போது முடி­வ­டை­ய­வுள்­ளது என்­பது தொடர்பில்   உயர்­நீ­தி­மன்­றத்­திடம்   சட்ட  அபிப்­பி­ராயம் ஒன்றை கோரு­வ­தற்­கான மனுவை  சில தினங்­களில்  உயர் நீதி­மன்­றத்­திற்கு  சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக   தெரி­ய­வ­ரு­கி­றது.  

 இது தொடர்பில் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தரப்­பினர்  கடந்த சில தினங்­க­ளாக  சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளுடன்  ஆலோ­சனை நடத்­தி­வ­ரு­வ­தா­கவும் அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து  தெரி­ய­வ­ரு­கி­றது.

 அதா­வது  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  கடந்த 2015ம் ஆண்டு ஜன­வரி மாதம் 9ஆம் திகதி  ஜனா­தி­ப­தி­யாக  பத­வி­யேற்றார்.   இந்­நி­லையில்   19 ஆவது திருத்த சட்டம் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு அதன்­பின்னர்    சில வாரங்­களில் சபா­நா­ய­கரின்   கையொப்­ப­மி­டப்­பட்­டது.  

அதன்­பின்­னரே  19ஆவது திருத்த சட்டம் அமு­லுக்கு வந்­தது.   19ஆவது திருத்த சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­டது.  

எனினும்  தான்  19ஆவது   திருத்த சட்டம் அமு­லுக்கு வரும் முன்­னரே  ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றதால் தான் எத்­தனை வரு­டங்கள்  பதவி வகிக்க முடியும் என்­பதை   ஏற்­க­னவே  ஜனா­தி­பதி உயர்­நீ­தி­மன்­றத்­திடம் கோரி­யி­ருந்த நிலையில் ஐந்து வரு­டங்­களே பதவி வகிக்க முடியும் என   உயர் நீதி­மன்றம் சட்ட  வியாக்­கி­யானம் அளித்­தி­ருந்­தது.

இந்த நிலை­யி­லேயே தற்­போது  தனது பத­விக்­காலம் ஐந்து வரு­டங்­க­ளாயின் அது எப்­போது  ஆரம்­பித்து எப்­போது   முடி­வ­டையும் என்­பது தொடர்­பா­கவே ஜனா­தி­பதி  உயர்­நீ­தி­மன்­றத்­திடம் சட்ட அபிப்­பி­ரா­யத்தை  கோர­வுள்­ள­தாக   அறி­ய­மு­டி­கின்­றது.

அதா­வது   19ஆவது திருத்த சட்டம்   அமு­லுக்கு வந்த தினத்­தி­லி­ருந்து  தனது பத­விக்­காலம் ஆரம்­பிக்­கு­மாயின்    இன்னும் சில மாதங்கள்   தான் பதவி வகிக்க முடி­யுமா என்­பது என்­பது ஜனா­தி­பதி தரப்­பி­னரின் வாத­மாக இருக்­கின்­றது.

 இந்த நிலை­யி­லேயே ஜனா­தி­பதி  தரப்பு இந்த   சட்ட விளக்­கத்தை  உயர்­நீ­தி­மன்­றத்­திடம் எதிர்­பார்த்­துள்­ள­தாக    தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   எனினும் எப்­போது ஜனா­தி­பதி  தரப்பு  இது­தொ­டர்­பான கோரிக்­கையை   முன்­வைக்கும்   என்ற தகவல் இது­வரை வெளி­வ­ர­வில்லை. எனினும்  சில  தினங்­களில் ஜனா­தி­பதி தரப்பு   இந்த விளக்­கத்தை   உயர்­நீ­தி­மன்­றத்­திடம் கோரலாம் என   எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

எப்­ப­டி­யி­ருப்­பினும் ஜனா­தி­பதி தரப்­பினர் இவ்­வாறு மீண்டும் ஒரு­முறை சட்ட அபிப்­பி­ரா­யத்தை   கோரு­வது அவ­சி­ய­மற்ற விடயம் என கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.  அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்த சட்டம்   மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன்    பாரா­ளு­மன்­றத்தில்  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி  நிறை­வேற்­றப்­பட்­டது.  

ஏழு எம்.பிக்கள் அன்­றை­ய­தினம் சபைக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.  அத்­துடன் ஒருவர்   19 ஆவது திருத்த சட்­டத்­திற்கு எதி­ராக  வாக்­க­ளித்­தி­ருந்­த­துடன் மற்­று­மொரு எம்.பி.  நடு­நி­லை­வ­கித்­தி­ருந்தார். ஆறு வரு­டங்­க­ளாக இருந்த  ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் இந்த 19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக  ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.  

அந்த வகையிலேயே   தனது பதவிக்காலம்   ஐந்து வருடங்களா? அல்லது ஆறு வருடங்களா?  என்பதை   முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உயர் நீதிமன்றத்திடம் வினவியிருந்தார். அப்போது ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என  சட்ட வியாக்கியானம்  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56