மன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடினப்பொருள் விற்பனை நிலையத்தில் (ஹாட்வெயார்) நேற்று புதன் கிழமை (18) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாகக் குறித்த விற்பனை நிலையத்திலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எறிந்து  சேதமாகியுள்ளது.

 

 வழமை போல் குறித்த விற்பனை நிலையம் (ஹாட்வெயார்) நேற்று புதன் கிழமை (18) இரவு மூடப்பட்டது.இந்நிலையில் இரவு 11 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தின் உட் பகுதியூடாக தீ விபத்து  ஏற்பட்டது.


உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, மன்னார் பொலிஸ் மற்றும் நகர சபைக்கு அறிவித்தனர்.

 


 

எனினும் மன்னார் நகர சபை பௌசர் ஊடாக நீர் கொண்டு சென்று தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அருகில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு தீ பரவாமல் அணைக்கப்பட்டது.


எனினும் குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எறிந்தமையால் பல இலட்சம் ரூபா பெறுமதியானப் பொருட்கள் எறிந்துள்ளது.

 


தீ அணைப்பு வாகனம் இல்லாமையினால் குறித்த தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 3 இற்கும் மேற்பட்ட பாரியத் தீ விபத்து இடம் பெற்ற போதும் தீ அணைப்பு வாகனம் இல்லாமையினால் தீ யை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 


 

எனவே மன்னார் மாவட்டத்திற்கு தீ அணைப்பு வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள அமைச்சர்,பாராளு மன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.