வாக்களிக்காத பிரபலங்கள்.!

By Robert

17 May, 2016 | 02:33 PM
image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, விக்ரம், சமந்தா, இளையராஜா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், இயக்குநர் மணிரத்னம், விக்ரம் பிரபு ஆகிய முன்னணி திரையுலகினர் வாக்களிக்கவில்லை.

'24' படத்தின் ப்ரிமீயர் காட்சிக்கு தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் சூர்யா. அவரால் திட்டமிட்டபடி சென்னை திரும்ப முடியவில்லை. இது குறித்து சூர்யா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் "மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

* தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் திருமணத்திற்கு பிறகு 5 முறை வீடு மாறியிருப்பதால் எங்கு வாக்கு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்கள். இச்சர்ச்சையால் இருவரும் வாக்களிக்கவில்லை.

* விக்ரம் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right