2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த  கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்