(நா.தினுஷா)

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளதில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை. அவர் சொல்வதை அதன்படியே செய்துகாட்டும் சிறந்த மனிதர். ஆகவே ஜனாதிபதி வேட்பாளராக களமிங்குவதற்கு கருவும் தகுதியானவர் என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கட்சியின் ஒரு தரப்பினர் கோருவது போன்று இன்னுமொரு தரப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கருஜய சூரியவையும் கோருகிறார்கள். 

எது எவ்வாறாயினும் அடுத்த வாரம் செயற்குழு கூடும். இதன் போது முன்வைக்கப்படவுள்ள  புதிய யோசனைகளுக்கு அமைவாக வேட்பாளரை தெரிவு செய்வோம் என்றும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.