(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் அறிவிக்கமாட்டார். தற்போது  சஜித் அணியினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் விரைவில்  பிரதமர் ரணிலுடன் இணைந்துக்கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் தி சொய்ஷா தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் அறிவிக்கமாட்டார். இன்று சஜித் அணியினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது நிச்சயம் பிரதமர் பக்கம் செல்வார்கள்.எனத் தெரிவித்தார்.