(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் 280,000 பேரில் சுமார் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.

குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.