லைபீரிய தலைநகர் மன்ரோவியாவை அணிமித்த பகுதியில் உள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 23 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அத்துடன் இதில் காயங்களுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

ஒரு மசூதியுடன் சேர்ந்துள்ள கட்டடத் தொகுதியியல் மாணவர்கள் தூக்கத்தில் இருந்தபோது இந்த தீ விபத்து அந் நாட்டு நேரப்படி அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

மீடபுப் படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அத்துடன் மேற்படி விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.