ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு முன்ரே சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே இம்முறை தேர்தலிலும் களமிறங்குமாறு உத்தியோகபூர்வமாக கோரியிருந்தனர். 

எனினும் அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய நிலைப்பாட்டை இது வரையில் தெரிவிக்காத நிலைமையில், பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் சு.க மாற்று வழி குறித்து சிந்திக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.