ஹபரணை பகுதியில்,  சற்று முன்னர்  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.ஹபரணை - பொலன்னறுவை வீதியில், வேன் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், வாகனத்தில் பயணித்த, இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.