வடமேல் மாகாண பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம்

Published By: Digital Desk 4

18 Sep, 2019 | 04:46 PM
image

நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் 280,000 பேரில் சுமார் 10% சதவீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

தற்கால ஆசிரியர்கள் சிறந்த ஆக்கத்திறனைக் கொண்டவர்களாகவும் ஆளுமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று (18) முற்பகல் குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. 100 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

கல்விப் போதனைகளுடன் மட்டும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது என்றும் பாடசாலையின் மாணவர்கள் குறித்த பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் பிள்ளைகள் நவீன தொழிநுட்பத்துடன் முன்நோக்கி செல்கின்றபோது வகுப்பறையின் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரியரின் அறிவு இற்றைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சாந்த பண்டார, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர்களான தர்மசிறி தசநாயக்க, அதுல விஜேசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்துடன் கூடிய புதிய அலுவலக கட்டிடத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, குருணாகல் மாநகர சபையின் நகரபிதா துஷார சஞ்ஜீவ விதாரண, வடமேல் மாகாண சபையின் தலைவர் டிகிரி அதிகாரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04
news-image

நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் காணப்படும் வாகனங்களுக்கான...

2025-04-17 20:35:55
news-image

பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம்...

2025-04-17 20:32:42
news-image

தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு...

2025-04-17 20:31:00