எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. ஹிந்தியை திணித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 

 

 

“நம் நாடு என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது. அது முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது. துரதிஷ்டவசமாக நம் நாட்டில், இந்தியாவில் பொதுவான மொழியைக் கொண்டுவர முடியாது. எந்த மொழியையும் நம்மால் திணிக்க முடியாது. முக்கியமாக ஹிந்தியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் எந்த மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏன் இந்தி திணிப்பை வட இந்தியாவே ஏற்றுக்கொள்ளாது.” என்றார்.