மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும் வீர­கே­ச­ரியும் இணைந்து ஏற்­பாடு
இலங்கை அரச பொது நிர்­வாக சேவைக்­கென நடத்­தப்­படும் பரீட்­சைக்கு மலை­ய­கத்­தி­லி­ருந்து விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்­கான விசேட வதி­விட பயிற்சி வகுப்­புக்­களை நடத்­து­வ­தற்கு மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும் வீர­கே­சரி நிறு­வ­னமும் கூட்­டாக இணைந்து ஏற்­பா­டுகளை மேற்­கொண்டுள்­ளன. 

இப்­ப­யிற்சி வகுப்­புகள் அட்டன் சீடா நிலை­யத்தில் எதிர்­வரும் 27ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

வீர­கே­சரி பத்­தி­ரிகை நிறு­வ­னத்­தின் அறி­வித்­த­லுக்­கேற்ப பதி­வு­செய்து கொண்­டுள்ள பரீட்­சார்த்­திகள் யாவரும் இதில் கலந்­து­கொள்ள முடியும். அதற்­கான அழைப்புக் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இப்­ப­ரீட்­சைக்கு விண்­ணப்­பித்­துள்ள மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு சிறந்த பயிற்­சியை வழங்­கு­வதன் மூலம் இப்­ப­ரீட்­சையில் அதி­கூ­டிய புள்­ளி­களைப் பெற்­று அரச பொது நிர்­வாக சேவையில் காணப்­படும் உயர் பத­வி­க­ளுக்­கான வெற்­றி­டங்­களில்  இவர்­களும் நிய­ம­னங்­களை பெற்­றுக்­கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்ட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே இப்­ப­யிற்சி வகுப்­புகள் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  

இப்­ப­யிற்சி வகுப்பின் முத­லா­வது அமர்வு எதிர்­வரும் 27ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை காலை 10.00 மணி­முதல் 29ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல்வரை இடம்­பெறும். மாதத்தில் மூன்று நாட்கள் என்­ற­வாறு அடுத்து வரும் மூன்று மாதங்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக பயிற்சி வகுப்­புக்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­கி­யி­ருந்து பயிற்­சியை பெற்றுக்கொள்­வ­தற்­கான தயார் நிலையில் சீடா வள நிலை­யத்­திற்கு 27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு முன்னர் வருகை தந்து தங்­களை பதிவு செய்து கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இப்­ப­யிற்சி வகுப்பில் பங்கு கொள்­ப­வர்­க­ளுக்­கான தங்­கு­மிடம், தேநீர், உணவு மற்றும் பயிற்சி வழங்­கு­ப­வர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் யாவற்­றையும் மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும் வீர­கே­சரி பத்­தி­ரிகை நிறு­வ­னமும் பொறுப்­பேற்றுக் கொண்­டுள்­ளன. 

இப்­ப­யிற்சி வகுப்பில் பங்­கு­கொள்ளும் விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­னதும் பயிற்சி வழங்கும் ஆசி­ரி­யர்­க­ளி­னதும் இன்­னோ­ரன்ன விட­யங்­களை  நெறிப்­ப­டுத்­து­வ­தற்கு இணைப்­பா­ளரும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

இப்­ப­யிற்சி வகுப்­பா­னது இத்­து­றையில் நல்ல அனு­ப­வ­மிக்க பயிற்­று­விப்­பா­ளர்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் ஆகியோர் இணைந்து நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­­டுள்­ளன.

இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ் (0716643669), பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக அர­ச­றி­வியல் துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஆர்.ரமேஸ் (0768629870) ஆகி­யோரின் நெறிப்­ப­டுத்­தலில் இடம்­பெ­ற­வுள்ள இப்­ப­யிற்சி வகுப்பின் முதல் நாள் ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் மற்றும் பேராசிரியர் எஸ். விஜயசந்திரன் ஆகியோருடன் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பிப்பர். மேலதிக தொடர்புகளுக்கு இப்பயிற்சி வகுப்பின் இணைப்பாளரான கஜனுடன் (0712899295) தொடர்பு கொள்ளலாம்.