எழுக தமிழ் உணர்த்தியுள்ள பாடம்...!

Published By: J.G.Stephan

18 Sep, 2019 | 02:46 PM
image

தமிழ் மக்கள் அணிதிரண்டு தமது நிலைப்பாட்டையும் பிரச்சினைகளையும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்ற அரசியல் தேவையை தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் குழுக்களும் உரிய முறை யில் உணரவில்லை என்பதையே இந்தக் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

ஜனா­தி­பதித் தேர்­தலை நாடு எதிர்­கொண்­டுள்ள சூழலில் தமிழ்த் தரப்பு அர­சியல் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கியம். தமிழ் மக்­களின் அர­சியல் வெளிப்­பாடு என்ற பொது நிலைப்­பாட்டில் இந்த முக்­கிய தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்­கான நகர்­வாக இலங்­கை­யிலும் புலம் பெயர் தளத்­திலும் நடந்­தே­றி­யுள்ள எழுக தமிழ் நிகழ்வு முக்­கிய படிப்­பி­னை­யையும் வெளிப்­ப­டுத்தியுள்­ளது.

தமிழர் தரப்பு அர­சி­யலின் கொள்­கை­நிலை வெளிப்­பா­டாக, இந்த நிகழ்வு பொது வெளியில் கரு­தப்­ப­டத்­தக்க வகையில் நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். தமிழ் அர­சி­யலின் பங்­கா­ளி­க­ளான அனைத்து அர­சியல் சக்­தி­களும் இதில் பங்­க­ளிப்புச் செய்­தி­ருக்க வேண்டும். ஆனால், கட்சி அர­சியல் மாயை­யிலும், தேர்தல் அர­சியல் மோகத்­திலும் மீட்சி பெற முடி­யாமல் மூழ்கிப் போயுள்ள தமிழ் அர­சியல் கட்­சி­களும், அர­சியல் குழுக்­களும் எழுக தமி­ழுக்கு அர­சியல் சாயம் பூசி அதனை மழுங்­க­டிப்­ப­தற்­கான முயற்­சி­களில் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருந்­தன.

இந்த முயற்­சி­களை முறி­ய­டித்து எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களின் வெளிப்­பாட்டுக் குர­லாக வெற்­றி­க­ர­மாக நடத்தி முடிப்­ப­தற்குத் தமிழ் மக்கள் பேரவை மிகத் தீவி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்­தது.

நேர் முர­ணான நிலை­மையில் ஏட்­டிக்குப் போட்­டி­யான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்­ன­ணியில் வெற்றி வெற்றி என்ற நிலையில் எழுக தமிழ் நடந்து முடிந்­துள்­ளது என்றே கூற வேண்டும்.

எழுக தமிழைப் புறக்­க­ணித்­த­வர்­களும், அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்­ளாமல் வெளியில் இருந்து ஆத­ரவு தெரி­விப்­ப­தாக அர­சியல் குத்­துக்­க­ரணம் அடித்­த­வர்­களும் விரும்­பிய வண்ணம் பெரிய அளவில் இந்த நிகழ்வு இடம்­பெ­ற­வில்லை. சில ஆயிரம் பேர் கலந்து கொண்­டி­ருந்­ததன் மூலம் பலர் அதனைப் புறக்­க­ணித்­து­விட்­ட­தாக இவர்கள் திருப்தி கொண்­டி­ருக்­கலாம். மகிழ்ச்சி அடைந்­தி­ருக்­கலாம். அந்த வகை யில் அவர்கள் வெற்றி பெற்­றி­ருப்­ப­தாகக் கரு­தலாம்.

வடக்கு, கிழக்குப் பிர­தேச அளவில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பொது­மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தமிழ் மக்கள் பேரவை நடத்­திய இந்த நிகழ்வில் எதிர்­பார்த்த அளவில் பொது­மக்கள் கலந்து கொள்­ள­வில்லை. இருப்­பினும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கொட்டும் மழைக்கு மத்­தி­யிலும் யாழ். நகரில் வந்து குவிந்­த­மையும், யாழ்ப்­பா­ணத்தில் மழை பெய்­யா­மையும் தமிழ் மக்கள் பேர­வைக்கு சாத­க­மான விட­யங்­க­ளாகும். இந்த வகையில் எழுக தமிழ் 2019 சிறப்­பாக இடம்­பெற்­றி­ருந்­தது. பேரின அர­சியல் சக்­தி­க­ளுக்கும் தென்­னி­லங்­கைக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் வெளிப்­ப­டுத்த வேண்­டிய கோரிக்­கைகள் அடங்­கிய குரல்கள் சிறப்­பாக ஒலித்­துள்­ளன. அந்த வகையில் இது எழுக தமிழ் நிகழ்வு ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்குக் கிடைத்த வெற்றி என்றே கொள்ள வேண்டும்.

ஆக எழுக தமிழ் நிகழ்வை நடத்­தி­ய­வர்­க­ளுக்கும், அதனை எதிர்க்கும் நோக்கில் புறக்­க­ணித்­த­வர்­க­ளுக்கும் வெற்றி வெற்றி என்ற வகையில் முடி­வ­டைந்­துள்­ளது. அந்த நிகழ்வு தந்­துள்ள படிப்­பி­னையை தமிழ் அர­சியல் சக்­திகள் கவ­னத்­திற்­கொண்டு செயற்­பட வேண்­டி­யது முக்­கியம்.

எழுக தமிழின் முயற்­சிகள்

எழுக தமிழின் பிர­க­டனம் ஏழு கோரிக்­கை­களை முன் வைத்­துள்­ளது. இந்தக் கோரிக்­கைகள் யுத்­தத்தின் பின்னர் பத்து வரு­டங்­க­ளாகத் தொடரும் தமிழ் மக்­களின் எரியும் பிரச்­சி­னை­களை மையப்­ப­டுத்தி இருக்­கின்­றன. இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தீர்வு காணப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் இந்த நிகழ்வின் மூலம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

சிங்­கள பௌத்த மய­மாக்கலை உடன் நிறுத்துபயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உடன் நீக்கு தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் தாம­த­மின்றி விடு­தலை செய்வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நியா­ய­மான தீர்ப்பு வேண்டும்.

வடக்கு, கிழக்கில் இரா­ணுவ மய­மாக்­கலை நிறுத்து இடம்­பெ­யர்ந்­துள்ள மக்கள் அனை­வ­ரையும் அவர்­க­ளது பாரம்­ப­ரிய இடங்­களில் குடி­ய­மர்த்து சர்­வ­தே­சமே இலங்­கையில் தமிழர் மீதான இன அழிப்பு விசா­ர­ணையை நடத்து என்ற கோரிக்­கை­க­ளையே எழுக தமிழின் பிர­க­டனம் இலங்கை அர­சி­டமும் சர்­வ­தே­சத்­தி­டமும் முன்­வைத்­துள்­ளது.

இந்த நிகழ்வில் முக்­கிய உரை­யாற்­றிய முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மா­கிய சி.வி.விக்­னேஸ்­வரன், ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இந்­தி­யாவும் சர்­வ­தே­சமும் இலங்கை விவ­கா­ரத்தில் தீவிர கவனம் செலுத்திச் செயற்­பட முன்­வர வேண்டும் என அழைப்பு விடுத்­துள்­ளனர்.

அந்த வகையில் எழுக தமிழ் இந்­தி­யா­வி­னதும், சர்­வ­தே­சத்­தி­னதும் கவ­னத்தை ஈர்க்க முனைந்­துள்­ளது. அதே­வேளை, எழுக தமிழின் ஊடாக இணைந்த தமிழ் மக்­களின் கொள்கை ரீதி­யான அர­சியல் திரட்சி தேர்­த­லுக்குத் தயா­ராகி வரு­கின்ற தென்­னி­லங்கை அர­சியல் கட்­சி­களின் கவ­ னத்தைத் தம் பக்கம் திருப்­பு­வ­தற்கு முயன்­றி­ருக்­கின்­றது.

இருப்­பினும் எழுக தமிழ் நிகழ்வில் எதிர்­பார்த்த அளவில் மக்கள் கலந்து கொள்­ளா­மையும், அந்த நிகழ்­வை­யொட்டி விடுக்­கப்­பட்­டி­ருந்த கடை­ய­டைப்பு மூல­மான பணிப்­பு­றக்­க­ணிப்பு நட­வ­டிக்­கையும் பிசு­பி­சுத்துப் போன நிலை­மையும் இந்த நிகழ்வு ஒரு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தத் தவ­றி­யி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.  

எழுக தமிழின் இந்த முயற்­சிகள் எந்த அள­வுக்கு வெற்றி பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை உட­ன­டி­யாக உய்த்­து­ண­ரவோ தேடி அறி­யவோ முடி­யாமல் உள்­ளது. ஏனெனில் இலங்­கை­யிலும் தமி­ழர்கள் புலம்­பெ­யர்ந்­துள்ள இடங்­க­ளிலும் இட­ம்­பெற்­றுள்ள எழுக தமிழ் நிகழ்வு குறித்த எதிர் வினைகள் அல்­லது அது தொடர்­பான கருத்­துகள் இந­தி­யா­விடம் இருந்தோ அல்­லது சர்­வ­தே­சத்­திடம் இருந்தோ உட­ன­டி­யாக வெளி­யா­க­வில்லை. இந்த நிகழ்வு குறித்த செய்­திகள் உரிய அளவில் சர்­வ­தேச ஊட­கங்­களின் கவ­னத்தை ஈர்க்கத் தவ­றி­யி­ருக்கக் கூடும். இதுவும்  இந்த நிகழ்வு குறித்த கருத்­துகள் வெளி­யா­ரிடம் இருந்தும் வெளி­நா­டு­க­ளிடம் இருந்தும் உட­ன­டி­யாக வெளி­யா­கா­மைக்கு முக்­கிய கார­ண­மாக இருக்­கலாம்.

சூழல்

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு தென்­னி­லங்கைக் கட்­சி­களும், அர­சியல் சக்­தி­களும் சுறு­சு­றுப்­போடு தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு நிலை­மையில் இந்த நிகழ்வு நடந்­தே­றி­யுள்­ளது. தேர்­தலை இலக்­காகக் கொண்டு தென்­னி­லங்கை அர­சியல் கட்­சி­களும் அர­சி­யல்­வா­தி­களும் வட பகுதி மக்­களின் வாக்­கு­களைக் குறி ­வைத்து வட ­மா­கா­ணத்­துக்குப் படை­யெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

எழுக தமிழ் வெளிச்சம் போட்டுக் காட்­டி­யுள்ள பிரச்­சி­னை­களின் வீரியம், அவற்றின் தாக்கம் என்­ப­வற்றை முழு­மை­யாக அறிந்­த­வர்­க­ளாக அவர்கள் தமது பிர­சா­ரத்தை முன்­னெ­டுக்­க­வில்லை. அவற்றை அறிந்­தி­ருந்­தாலும், அறி­யா­த­வர்­க­ளாக அல்­லது அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களே பிரச்­சி­னை­களைத் தீர்க்க வல்­லவை என்ற கருத்­தியல் கொண்­ட­வர்­க­ளாக அவர்கள் செயற்­ப­டு­கின்­றார்கள்.

தமிழ் மக்­களின் வாக்­கு­களை வேட்­டை­யா­டு­வதை மட்­டுமே அவர்கள் இலக்­காகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பாரிய அபி­வி­ருத்தி வேலைத் திட்­டங்­களை கவர்ச்­சி­ க­ர­மாக முன்­வைத்து தமது பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். பிரச்­சி­னை­களின் ஆழத்­தையும், பாதிக்­கப்­பட்ட மக்கள் மீதான அவற்றின் தாக்­கத்­தையும் உண­ராத நிலை­யி­லேயே இந்தக் கருத்­து­களும் வாக்­கு­று­தி­களும் அமைந்­தி­ருக்­கின்­றன.

ஐக்­கிய தேசிய கட்­சியின் அதி­கா­ர­பூர்வ அறி­வித்­த­லுக்கு முன்பே, தன்­னைத்­தானே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கருதி மக்கள் மத்­தியில் ஆத­ரவைத் திரட்டி வரு­கின்ற சஜித் பிரே­ம­தாச தேர்­தலில் வெற்றி பெற்றால் ஆறு மாதங்­களில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­போ­வ­தாகக் கூறி­யுள்ளார். இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு இரண்டு வரு­டங்கள் தேவை என்று சஜித் பிரே­ம­தாச சார்ந்­துள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார்.

பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ரா­கிய கோத்­த­பாய ராஜ­பக் ஷ, தான் ஓர் இன­வா­தி­யல்ல என்­பதை இந்தத் தேர்­தலின் மூலம் நிரூ­பிக்கப் போவ­தாகக் கூறி­யுள்­ள­துடன், தமிழ் மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு நிச்­சயம் தீர்வு காணப்­படும் என வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.

மொத்­தத்தில் தெளி­வற்ற ஓர் அர­சியல் சூழ­லையே ஜனா­தி­பதித் தேர்தல் களம் கொண்­டி­ருக்­கின்­றது. இது­வ­ரையில் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள், தமிழ் மக்கள் நம்­பிக்கை கொள்ளக்கூடி­ய­வர்­க­ளாக இல்லை. இந்தத் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்கும், ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் இடை­யி­லேயே கடும் போட்டி நிலவும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது. ஆனால், இதில் மற்­று­மொரு முக்­கிய பாத்­தி­ர­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பாளர் யார் என்­பது இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

அந்­தக்­ கட்­சியின் சார்பில் வேட்­பா­ள­ராகத் தன்னை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்ற சஜித் பிரே­ம­தாச தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­கின்ற ஆளு­மையைக் கொண்­டி­ருக்­கி­ன்­றாரா என்று சாதா­ரண தமிழ் மக்கள் மத்­தி­யிலும் சந்­தேகம் நில­வு­கின்­றது.

மீட்­சிக்­கு­ரிய வழி­களைக் காண­வில்லை

இத்­த­கைய சூழலில் தமிழ்த் ­த­ரப்பு அர­சி­யலின் தலைமை வலி­மையும் செயல் வல்­ல­மைக்­கான வீரி­யமும் கொண்­டி­ருக்க வேண்­டிய அவ­சியம் எழுந்­துள்­ளது. ஆனால் அத்­த­கைய தலை­மையைக் காண முடி­ய­வில்லை. எழுக தமிழ், தமிழ் மக்­களை அணி திரட்டி, தமிழ்த் ­த­ரப்பின் திரட்­சியை வெளிக்­காட்ட முற்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், அங்­கேயும் தற்­போ­தைய அர­சியல் சூழ­லுக்கு ஈடு­கொ­டுக்­கத்­தக்க ஆளுமை மிக்க தலைமை இல்லை என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.  

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ர­வைக்­கொண்ட ஒரு தலைமை அவ­சியம் என்ற அர­சியல் தேவை கடந்த பத்து வரு­டங்­க­ளாக தமிழர் தரப்­புக்கு உணர்த்­தப்­பட்­டுள்­ளது. விடு­த­லைப்­பு­லி­களின் ஆளுமை மிக்க தலை­மையில் ஆயுதப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர், சாத்­வீக வழி­யி­லான போராட்­டங்­களை மீண்டும் கையில் எடுக்க வேண்­டிய நிலை­மைக்குத் தள்­ளப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு ஆளுமை மிக்க அர­சியல் தலைமை அமை­ய­வில்லை.

இந்தக் கசப்­பான உண்­மையை கடந்த பத்து வரு­டங்­களும் அனு­பவ ரீதி­யாகத் தமிழ் மக்­க­ளுக்கு உணர்த்­தி­யி­ருக்­கின்­றன. யுத்­தத்­தின் பின்னர் தமிழ் மக்­களின் அர­சி­யலில் ஏற்­பட்­டி­ருந்த தலை­மைக்­கான வெற்­றி­டத்தை தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பு நிரப்­பி­யி­ருந்­தது. தமிழ் மக்­களும் மிகுந்த நம்­பிக்­கை­யோடு அதன் கீழ் அணி திரண்­டி­ருந்­தனர்.

இருப்­பினும் இறுக்­க­மான ஒரு கட்­ட­மைப்பைக் கொண்ட ஓர் அர­சியல் அமைப்­பாக அது பரி­ண­மிக்கத் தவ­றி­ விட்­டது. ஆயுத மோதல்கள் முடி­வ­டைந்த பின்பும், ஒரு மௌன யுத்­தத்தின் பாதிப்­பு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய கட்­டாய நிலை­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்ள தமிழ் மக்­களின் அர­சியல் மீட்­சிக்­கு­ரிய உறு­தி­யான அர­சியல் வழி­காட்­டல்

க­ளையும் அர­சியல் வழித்­த­டத்­தையும் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்­க­வில்லை.

தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கவும், தமிழ்த்­ த­ரப்பு அர­சி­யலில் செல்­வாக்குப் பெற்ற சக்­தி­யா­கவும் திகழ்ந்­தது, திகழ்­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால், கூட்­ட­மைப்பு தேர்தல் அர­சி­ய­லிலும் கட்சி அர­சி­யலைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் காட்­டிய அக்­க­றையும் கரி­ச­னையும், தமிழ்த்­த­ரப்­புக்­கான ஆளுமை மிக்க தலை­மையைக் கட்­டி­யெ­ழுப்பத் தவ­றி­விட்­டது. ஆளு­மையும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் ­கொ­டுத்து, அவற்றைப் படிப்­ப­டி­யாகக் குறைக்­கத்­தக்க செயல் வல்­ல­மையும் கொண்ட ஓர் அர­சியல் தலை­மையை உரு­வாக்­கு­வ­தற்குத் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பினால் முடி­யாமல் போய்­விட்­டது.  

அர­சியல் சோகம்

தேர்­தலில் வெல்ல வேண்டும் நாடா­ளு­மன்ற அர­சி­யலில் பலம் மிக்­க­தாகத் திகழ வேண்டும் என்ற கட்சி அர­சியல் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­தப்­பட்­டதே தவிர தீர்க்­க­த­ரி­சனம் மிக்க அர­சியல் வழி­மு­றை­களில் தமிழ் மக்­களை வழி­ந­டத்­து­வதில் உரிய கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கும் இரா­ஜ­தந்­திர ரீதியில் தீர்க்­க ­த­ரி­சனம் மிக்க வழி­மு­றை­களில் பேரின அர­சியல் சக்­தி­க­ளு­ட­னான அர­சியல் தொடர்­பு­களை கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ள­வில்லை. எதிர்ப்­ப­ர­சி­யலில் ஈடு­பட்டு யுத்­தத்தில் வெற்­றி­ பெற்­றி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை உறு­தி­யாக எதிர்­கொண்­டி­ருந்த போதிலும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத்­தக்க வகையில் அதனை வளைத்து நெளித்துச் செயற்­படச் செய்ய முடி­ய­வில்லை.

தென்­னி­லங்­கையின் பொது அமைப்­புகள், ஜன­நா­யக சக்­தி­க­ளுடன் இணைந்து எதேச்­ச­தி­காரப் போக்கில் சென்ற மஹிந்த ராஜ­பக் ஷவை 2015 தேர்­தலில் தோற்­க­டித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய போதிலும், நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் கூட்­ட­மைப்­பினால் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­ய­வில்லை.

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி பல விட்­டுக்­கொ­டுப்­பு­களைச் செய்­தி­ருந்த போதிலும், அதற்கு ஈடாக சிறிய அள­வி­லான பிரச்­சி­னை­களைக் கூட தீர்த்து வைப்­ப­தற்குப் புதிய அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுக்க முடி­யாமல் போயுள்­ளமை மிக மோச­மான அர­சியல் சோக­மாகும்.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும், ஒரு வரு­டத்தில் அர­சியல் தீர்வு காண முடியும் என்ற அதீத நம்­பிக்­கை­யுடன் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி அர­சாங்­கத்தை நெருக்­க­டி­களில் இருந்து காப்­பாற்­றிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய அதி­ருப்­தியைச் சம்­பா­திப்­ப­தற்கே வழிவகுத்­தி­ருந்­தது.

கூட்­ட­மைப்பின் மீது நம்­பிக்கை இழக்கத்தக்க நிலை­மை­க­ளுக்குள் தமிழ் மக்­களைத் தள்­ளிய நல்­லாட்சி அர­சாங்கம் தங்­க­ளையும் ஏமாற்­றி­ விட்­டது, தாங்­களும் அரசு மீது நம்­பிக்கை இழந்­து­விட்டோம் என்று கூட்­ட­மைப்பின் தலை­மையே பகி­ரங்­க­மாகக் கூறும் அள­வுக்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நிலை­மைகள் மோச­ம­டைந்­தமை மிக மிக மோச­மான மற்­று­மொரு சோக­மாகும்.

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கிய நல்­லாட்சி அர­சாங்கம் மட்­டு­மல்ல நிலை­மா­று­கால நீதிக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கி உரிமை மீறல்­க­ளுக்கும் போர்க்­குற்­றங்­க­ளுக்கும் பொறுப்புக் கூறு­கின்ற கடப்­பாட்டை நிறை­வேற்ற வேண்டும் என தீர்­மா­னத்­துக்கு மேல் தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி அர­சாங்­கத்தை வழி­ந­டத்­திய ஐ.நா.­வும் ­சரி, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையும் அதன் அங்­கத்­துவ நாடு­களைக் கொண்ட சர்­வ­தே­ச­மும்­ சரி, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நடை­முறைச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இதுவும் கவ­லைக்­கு­ரி­யதே.

எழுக தமிழ் தந்­துள்ள படிப்­பினை

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் ஜனா­தி­பதித் தேர்­தலும் அடுத்­த­தாகப் பொதுத் தேர்­தலும் நடத்­தப்­பட உள்­ளன. அதே­வேளை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் செப்டெம்பர் மாத அமர்வும் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. உள்­ளூ­ரிலும் சர்­வ­தேச அள­விலும் முக்­கி­யத்­துவம் மிக்க இத்­த­கை­யதோர் அர­சியல் சூழ­மை­வி­லேயே தமிழ் மக்களின் ஒன்றிணைந்த குரலை ஒலிக்கச் செய்வதற்கான எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை அரங்கேற்றியுள்ளது.

பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் கடுமையான விமர்சனங்களுக்கும் மத்தியில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான திரட்சியை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்திருந்தது. அதில் அங்கம் வகிக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட செயற்பாடாக தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட்டிருந்தன.

எழுக தமிழ் நிகழ்வின் ஊடாக ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பன தேர்தல் கால அரசியல் இலாபம் அடைய முற்பட்டிருப்பதாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கண்டனங்களும் வெளியிடப்பட்டன.

தமிழ் மக்கள் அணிதிரண்டு தமது நிலைப்பாட்டையும் பிரச்சினைகளையும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்ற அரசியல் தேவையை தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் குழுக்களும் உரிய முறையில் உணரவில்லை என்பதையே இந்தக் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

ஜனாதிபதித் தேர்தல் நிலைமைகளும், அடுத்து வரவுள்ள பொதுத் தேர்தல் கள நிலைமைகளும் தமிழ்த்தரப்புக்கு பெரும் சவால் மிகுந்த அரசியல் நிலைமைகளை உருவாக்க வல்லன என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தத் தேர்தல் கால அரசி யல் சவால்களைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்ததோர் அரசியல் சக்தியின் ஊடாகவே எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த அரசியல் யதார்த்தத்தை எழுக தமிழ் பேரணி ஒரு படிப்பினையாக ஆழமாக உணர்த்தியுள்ளது. இதனை தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயற்பட வேண்டியது அவசி யம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04