உயிர்ந்த ஞாயிறு அன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் உடற்பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யும் படி கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்கொலை குண்டுதாரி மொஹமட் முபாரக்கின் உடலை, அவரது உறவினர்கள் பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்தே கோட்டை நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.