உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற  விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தெரிவுக்குழுவின் பதவிக்காலமானது இம் மாதம் 23 ஆம் திகதி முடிவுக்கு வரவிருந்த நிலையில்  சாட்சியங்களில் இறுதிக்கட்ட  விசாரணையாக ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதுடன் அறிக்கையை முழுமைப்படுத்த வேண்டியிருந்தது.

அத்துடன் குறித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.