உலகில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களை 36 மணித்தியாலத்தில் காவுகொள்ளும் ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஒன்று அதாவது வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்களின் குழு தெரிவித்துள்ளது.  

"ஸ்பானிஷ் ப்ளு" என்ற பெயரில் இந்த வைரஸ் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொற்றியமையால் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான வைரஸ் காய்ச்சல் தொற்றால் பாரிய ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என வைத்திய நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. 

உலக தலைவர்களுக்கு விசேட அறிக்கயைில் உலக சுகாதார  அமைப்பின் முன்னாள் தலைவர் தலைமையிலான நிபுணர்கள் குழு இதனைத் தெரிவித்துள்ளது. 

"ஸ்பானிஷ் ப்ளு"  என்ற வைரஸ்  உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவக் கூடிய ஆபாய நிலை தென்படுவதாகவும், இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைக் காவுக்கொள்ளும், பொருளாதாரங்களை சீர்குலைக்கும் மற்றும் குறுகிய காலத்தில் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது உலகம் முழுவதும் பரவிக் காணப்படும் எபோலா வைரஸை தடுப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை என அந்த அறிக்கையில் நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த வைரஸ் தொடர்பாக கடந்த காலங்களில் உலக தலைவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

நோர்வேயின் முன்னாள் பிரதமரும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநருமான வைத்தியர்  ப்ரோ ஹார்லெம் புருண்ட்லேண்ட் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கத்தின் பொதுச்செயலாளர் அல்ஹாட் அஸ் சை ஆகியோர் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.