ஒருமை ' என்ற சிந்தனையை நோக்கி திரும்பும் ஒரு இந்தியாவை உருவாக்கும் முயற்சி

Published By: Daya

18 Sep, 2019 | 01:20 PM
image

 ' ஒரு தேசம், ஒரு மொழி ' பற்றிய இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வலிமையான வாதம்  இந்தியை தேசியமொழியாக்கவேண்டும் என்ற பழைய சர்ச்சைக்குரிய அழைப்பை புத்துயிர்ப்புச் செய்வதாக அமைகிறது. 

  ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்துச்செய்த செயலை ' ஒரு தேசம், ஒரு அரசியலமைப்பு ' என்ற சிந்தனையை காரணம் காட்டி பாரதிய ஜனதா அரசாங்கத்தினால்  நியாயம் கற்பிக்கக்கூடியதாக  இருந்ததுடன் அந்த நடவடிக்கைக்கு பரந்தளவில் மக்களின் ஆதரவையும் பெறமுடிந்தது. இந்தியாவின் தேசிய மொழிப்பிரச்சினை என்ற --  சர்ச்சைக்குரியதும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்ததுமான என்ற பிரச்சினையை மீண்டும் கிளப்புவதற்கு இந்த தருணம் பொருத்தமானது என்று ஷா கருதியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்தியாவை ஒன்றிணைக்கக்கூடிய மொழி என்று இந்தியை வரணித்த ஷா  மகாத்மா காந்தியினதும் சர்தார் வல்லபாய் பட்டேலினதும் கனவை நனவாக்குவது குறித்தும் பேசினார். நாடு முழுவதற்கும் ஒரே மொழி வேண்டும் என்று காந்தியும் பட்டேலும் விரும்பியதாக அவர் கூறுகிறார். ஆனால், அவரின் சிந்தனைகள் தனியொரு தேசக்கட்டமைப்புக்குள் வேறுபட்ட அடைாளங்களை ஒன்றுதிரட்டும் தேசிய உணர்வுமிக்க திட்டத்தில் இருந்து தூரவிலகியனவாக இருக்கின்றன.

பாரதிய ஜனதாவின் தேசியவாதமும் அது பற்றிய மோடி - ஷா ஆட்சியின் வியாக்கியானமும் இந்தியாவின் பன்மைவாத தூண்டுதல்களை பொய்யாக்கி  ஒருமைப்பண்புகொண்ட நாடாக அதைக் குறுக்கும் அவர்களின் நோக்கத்திற்கு இசைவானவையே. 

ஒருமை என்ற சிந்தனையை நோக்கி திரும்புகின்ற - தனியொரு அடையாளத்துடனான நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பாரதிய ஜனதா நாட்டின் பலமத, பல கலாசார மரபுரிமையை மலினப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு பின்வாங்கவில்லை. அந்த முயற்சிகளின் தொடர்ச்சியில் இப்போது அடுத்த முக்கியமான பிரச்சினையை மோடி அரசாங்கம் கையிலெடுத்திருக்கிறது. இங்கு தான் இந்தி தொடர்பான விவகாரம் வருகிறது.

பாரதிய ஜனதா அந்த  விடயத்தில் இவ்வாறு நடந்துகொள்வது இதுதான் முதற்தடவையல்ல. இந்தியை தேசியமொழியாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் பாரதிய ஜனதா அரசாங்கம் முன்னரும் ஈடுபட்ட பல சந்தர்ப்பங்களைக் கூறமுடியும்.

8 ஆம் வகுப்புவரை இந்தியை கட்டாய பாடமாக்குவதற்கு புதிய கல்விக்கொள்கையில் யோசனை ஒன்றை மிக அண்மையில்தான் மோடி அரசாங்கம் முன்வைத்திருந்தது. தென் மாநிலங்களில் இருந்து கிளம்பிய கடுமையான எதிர்ப்பை அடுத்து உடனடியாகவே அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்த தடவையும் கூட இந்த பற்றிய உள்துறை அமைச்சர் ஷாவின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் அரசியல் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்தமொழி பேசாத பல  மாநிலங்களின் மக்களின் அடையாளங்களுக்கு அடிப்படையாக அமைகின்ற அம்சங்களுக்கு எதிரானவர்களாக மோடியும் ஷாவும் செயற்படுகிறார்கள்.

 ஒரு 15 வருட காலத்துக்கு ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தியை இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக அரசியல் நிருணயசபை ஏற்றுக்கொண்டபோதிலும், மொழிப்பிரச்சினை ஒருபோதுமே உண்மையில் தீர்க்கப்படவில்லை.இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் கைவிடத்தயாரில்லாத வரை இந்தியுடன் ஆங்கிலமும் தொடரும் என்று 1959 ஆம் ஆண்டு பாராளுமனறத்தில் ஜவஹர்லால் நேரு உறுதியளித்தார். 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மூண்ட இநத எதிர்ப்புக் கிளர்ச்சி மொழிப்பிரச்சினையைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருந்துவந்த நிலைமை தொடருவதற்கு நிர்ப்பந்தித்தது.

 இந்த நிலைவரத்தை மாற்றவேண்டுமென்ற  ஆர்வம் பாரதிய ஜனதாவுக்கு பல தடவைகள் வந்திருக்கிறது.அந்த ஆர்வத்துக்கு இந்துத்வாவில் உள்ள கோட்பாட்டு அடிப்படைகளும் காரணமாக இருக்கின்றன.அத்துடன் நடைமுறைச்சாத்தியமானவை என்று மோடி அரசாங்கம் நினைக்கின்ற காரணங்களும் இருக்கின்றன.

ஒரேயொரு விதிவிலக்காக இருக்கும் கர்நாடக மாநிலத்தைத் தவிர, மற்றும்படி தென்னிந்தியாவுக்குள் ஊடுருவ பாரதிய ஜனதாவினால் முடியாமல் இருக்கிறது. பரந்தளவில் இந்தி பயன்பாட்டில் இருக்கக்கூடிய நிலைமை தோன்றினால், எதிர்காலத்தில் தென்மாநிலங்களையும்  தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு தயார்படுத்தலாம் என்று பாரதிய ஜனதா நம்புகிறது போலும்.

 ( டெக்கான் ஹெரால்ட் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04