26.2 மைல் தூர மரதன் ஓட்டப் பந்­த­யத்தில்  தனது 3  பிள்­ளை­களை  தள்­ளு­வண்­டியில் வைத்து தள்­ளி­ய­வாறு ஓடி அமெ­ரிக்க மொன்­டானா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 35 வயது பெண்­ணொ­ருவர் உலக சாதனை படைத்­துள்ளார்.

போல்ஸன் நகரைச் சேர்ந்த சிந்­தியா ஆர்னோல்ட் என்ற மேற்­படி பெண்   தனது 6 வயது, 3 வயது மற்றும் 11 மாத பிள்­ளை­களை இவ்­வாறு தள்­ளு­வண்­டியில் வைத்து தள்­ளி­ய­வாறு  ஓடி  மேற்­கொண்ட இந்த சாதனை கின்னஸ் உலக சாதனைப் பதி­வேட்டு அதி­கா­ரி­க ளால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

அவர் இந்த மரதன் ஓட்­டத்தை 3 மணித்­தி­யா­லங்கள் 11 நிமிட நேரத்தில் பூர்த்தி செய்துள்ளார்.