அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டம் ; மஸ்கெலியாவில் சம்பவம்

By T Yuwaraj

18 Sep, 2019 | 12:49 PM
image

மஸ்கெலியா கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி அங்குள்ள ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் முன்னால் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து அந்த ஆசிரியர் தெரிவிக்கையில், பாடசாலையின் ஊழல் சம்பந்தமாக மத்திய மாகாணத்திற்குப் புகார் செய்ததால் வலய பணிப்பாளர் மற்றும் அதிபர் இணைந்து எனது நாளாந்த வகுப்புக்கான நேர அட்டவணையை வழங்க மறுத்துள்ளனர்.

இது ஒரு மனித உரிமையை மீறும் செயல் எனவும் எமது மலையக சிறார்களின் கல்வியைப் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு செல்ல வழிவகுக்கும் எனவும் அதிபரை இடமாற்றம் செய்வதுடன் பாடசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடியை உடன் மாகாண மட்டத்தில் வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்; எனக் கோரியே குறித்த பணிபுரஸ்கரிப்பை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right