(செ.தேன்மொழி)

பியகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஏழு பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிவான் நீதிமன்றத்தினால் பெற்றுக் கொண்ட சோதனை அனுமதிக்கமையவே இந்த சுற்றிவளைப்புகள் நேற்றைய தினம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொலம்பகே ஆர, குருவிட்ட, தலவாக்கலை, பன்னிபிட்டி, ஊருபொக்க, மெல்சிறிபுற, மத்தேகொட மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 23 - 41 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.