அம்பாறை - அக்கரைப்பற்று - பாலமுனை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி - 56 துப்பாக்கி , தோட்டாக்கள் உட்பட பெருமளவிலான வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அம்பறை பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன். இதன்போது பயங்பரவாதிகளால் மிக சூட்சுமமான முறையில் பூமியில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த  பெருமளவான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது ரி-56 துப்பாக்கி , 30 தோட்டாக்கள் , மெகசின் , 7 டெட்டனேட்டர்கள் , 4 ஜெலட்னைட் கூறுகள் மற்றும் அமோனியா உள்ளிட்ட பெருந்தொகையான வெடி மருந்துகளும் மீட்கப்பட்டன.

அம்பாறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.