ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் வேட்­பாளர் ஒருவர் தனித்து கள­மி­றங்­கு­வது தேவை­யற்ற விட­ய­மென்று  தேசிய காங்­கி ரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம். அதா­வுல்லா தெரி­வித்­துள்ளார். மர்ஹும் அஷ்­ரபின் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­று­முன்­தினம் ஏறா­வூரில் இடம்­பெற்ற போது நினைவுப் பேருரை ஆற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரி­வித்த அவர்,

"ஹிஸ்­புல்­லாவின் இந்த முன்­னெ­டுப்­பா­னது எவ­ரு­டைய யோசனை என்று எனக்கு விளங்­க­வில்லை". நாங்கள் அழிந்­தது போதும் என்­பதை அவ­ருக்குச் சொல்ல விழை­கின்றேன். டாக்டர் இலியாஸ், ரசூல் போன்­ற­வர்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அது ஒரு ஜோக்­காக கரு­தப்­பட்­டது. 

அதேபோன்று ஜோக்­க­டிக்கும் நேர­மல்ல இது. உங்­களை, நீங்கள் குறைத்­துக்­கொள்ள வேண்டாம். முஸ்லிம் சமூகம் பேரம் பேசும் சக்­தியை வைத்து தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­கின்­றது என்று சிங்­கள இன­வா­திகள் ஏற்­க­னவே குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். 

ஜனா­தி­பதித்  தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு   நமது வண்­ட­வா­ளங்­களை வெளிக்­காட்ட வேண்­டுமா? நமக்கு எதி­ராக இருக்கும் இனத்   துவே­ஷத்தை இன்னும் அதி­க­ரிக்க  வேண்­டுமா? எனவே இறை­வனை நாம்  பயந்து கொள்ள வேண்டும்  என்                            றார்.

இந்த நிகழ்வில் உரை­யாற்­றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீ லங்கா  சுதந்­திரக்  கட்சி மட்­டக்­க­ளப்பு மாவட்ட அமைப்­பா­ரு­மான சுபைர் கூறி­ய­தா­வது,

 மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் தலைமை எனக்  கூறிக்­கொள்ளும் ஹிஸ்­புல்லாஹ், முஸ்லிம் மக்கள் சார்­பாக வேட்­பா­ள­ரை இறக்­கு­வதன் மூலம் சமூக உரி­மை­களை வென்றுகொள்ள முடியும், பேரம் பேச முடியு­மெனக் கூறி வரு­கிறார். அவர் அனைத்து முஸ்லிம் கட்­சி­க­ளையும் ஒன்று சேர்த்து சமூ­கத்­துக்­கான பேரம் பேசலை சரி­யாக செய்­து­கொள்­வதை விடுத்து   இவ்­வா­றான முயற்­சிகள் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

ஏற்­க­னவே  நமது பொரு­ளா­தாரம் கேள்­விக்­கு­றி­யாகி உள்ள நிலையில் இன்னும் சமூகம் நசுக்­கப்­ப­டு­வ­தற்­கான சூழ்நிலை­களை உரு­வாக்கக் கூடாது.  வேறு மாகா­ணங்­களில் வாழும் முஸ்­லிம்­களை இவ்­வா­றான முயற்­சிகள் பெரு­ம­ளவு  பாதிக்கும்.  அவர்­களை  வீணான சிக்­க­லுக்குள் தள்ளும். 

மர்ஹும் அஷ்ரப் கடந்த காலங்களில் அப்போதைய  ஆட்சியாளர்களுடன் இணைந்தே ஜனாதி பதித்  தேர்தலில்  சமூகத்தை  வழிநடத் தினார். அவர் ஒரு போதும் இவ்வாறான தனித்த முயற்சிகளை முன்னெடுத்தது மில்லை  என்றார்.