ஹாலி எல, கந்தே கெதர பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சமஹிபுர, சப்புமல் உயன ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதையின் சுமார் 250 மீற்றர் வரையான பகுதி செப்பனிடப் படாமையால் அங்குள்ள மக்கள் தமது போக்குவரத்து தேவையை நிறைவு செய்து கொள்வதில் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

  இவ்விரு கிராமங்களிலும் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் இப்பாதையே பயன்படுத்தப்படுகின்றது.

இப்பாதை வழியாகவே பொது மயானத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.கிரியகொல்ல மற்றும் இவ்விரு கிராம மக்களும் இம் மயானத்தை பயன்படுத்துகின்றனர். 

சுமார் 10 வருட காலமாகப் பாதை செப்பனிடல் தொடர்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு சிறிய பகுதி மாத்திரம் கொங்றீற் இடப்பட்டுள்ளது. எனவே இப்பாதையைச் செப்பனிட்டுத் தருமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.