இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. 

அதன்படி முதலாவதாக ஆரம்பமாகியுள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி கடந்த 15  ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெறவிருந்தது. எனினும் தொடர் மழை காரணமாக நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது போட்டி கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

கடந்த போட்டியில் மழை சொதப்பிய நிலையில், இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு எதுவும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.