நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக தொடர்ந்தும் டெங்கு நோய் அதிகம் பரவும் அபாயம் காணப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய்க்கான அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு அறிக்கையில் குறிப்பிடும்போது,

கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, நகர் புறங்களில் நுளம்புகள் பரவும் இடங்கள் அதிகமாகி இருப்பதனால் டெங்கு பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்த வருடத்தின் செப்டம்பர் இரண்டாம் வார காலப்பகுதிக்குள் டெங்கு நோயின் மூலம் 45, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எழுபது பேர் மரணித்தும் உள்ளனர். அதன்படி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதை காணலாம். தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் மருத்துவமனைக்கு வெளியான தகவல்களின் படி டெங்கு நோயாளர்கள் குறைவடைந்ததற்கு  முக்கிய காரணம்.

காய்ச்லின் போது வலி குறைக்கும் மறந்து பயன்படுத்தல்,(NSAIDs),(Steroids), காய்ச்சல் தோன்றிய பிறகு உடனடிமருத்துவ சிகிச்சை பெற்றமை, சுற்றுப்புற சூழலில் நீர் நிறைந்த,நுளம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்  இடங்களை (தேங்காய் சிறட்டைகள்,பொலித்தீன் பைகள்,யோகட் கோப்பைகள்) இனங்கண்டு இல்லாதொழித்தல்.

எனவே டெங்கு நோய் தடுக்க பின்வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவதானம் செலுத்துதல் அவசியம்.

தமது சுற்றுப்புற சூழலில் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும்  இடங்களை இல்லாதொழிக்க வேண்டும். நுளம்பு கடிப்பதை தவிர்க்க நுளம்பு வலைகளை பயன்படுத்தல். காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு தினங்களில் அருகில் இருக்கும் வைத்தியரிடமோ அல்லது வைத்தியசாலையிலோ ஆலோசனையை பெறுதல். கடுமையான காய்ச்சலின் போது நிவாரணி மருந்துகளாக (NSAIDs),(Steroids) மருந்துகளை பாவித்தல்.

காய்ச்சலின் போது வாந்தி ஏற்படுதல்,தலைச்சுற்றல்,சிறுநீர் அளவு குறைவடைதல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளவும்.

இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது டெங்கு நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை  பாதுகாத்து கொள்ளலாம் என தேசிய  டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.