இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. 

பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே  சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது.

டிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு வாழ்வின் மீதான பிடிப்பை வழங்கியது என உறவினர்களை மேற்கோள் காட்டி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

பேன்ஸ்டோக்சின் தாயார் டெப்பும் முதல் கணவர் ரிச்சட் டன்னும் பிரிந்தனர், கடும் கருத்துவேறுபாட்டில் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் 1988ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இருபிள்ளைகளையும் தன்னுடன் அழைத்து சென்ற டன் அவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றார் எனவும் தெரிவித்துள்ளது.

அவ்வேளை பென்ஸ்டோக்சின் தாயார் ரக்பி பயிற்றுவிப்பாளா ஜெராட் ஸ்டோக்சுடன் உறவில் இருந்தார், இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்களின் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பென் அவரது தாயார் கடும் மன நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நேரத்தில் பிறந்தார்,பென் பிறந்தது அவரின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்தது எனவும் சன் உறவினர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு கிரிக்கெட்டராக இவ்வளவு விடயத்தை அவர் சாதித்து தாயை பெருமைப்படுத்தியுள்ளமை மிகவும் பெரிய விடயம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பென்ஸ்டோக்சின் தாயாரே ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஆனால் அவர் வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியில்லை என கருதினோம் ஆனால் பென்ஸ்டோக்சின் பிறப்பு அவரை மாற்றியது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பென்ஸ்டோக்சிற்கு 12 வயதாகும்போது அவர்கள் இங்கிலாந்திற்கு வந்தனர் என தெரிவித்துள்ள சன் அவரது தாயார் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.