(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாண அடிப்படையில் கணக்காய்வாளர்களை நியமிப்பதற்கான  2012 ஆம் ஆண்டு வர்த்தமானி, சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு 63 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய பரீட்சசைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டபோது  தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் 2012 ஆம் ஆண்டு வடக்கு,கிழக்கை மட்டும் மையமாக வைத்து உள்வாங்கல்கள் இடம்பெற்றதனால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பின்பு 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 105 பேரை உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டபோதும் 273 பேர் கணக்காளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன்பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 202 பேரை உள்வாங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதனை விடவும் அதிகமானவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.