வீதியில் ஒரே திசையில்  சென்று கொண்டிருந்த  இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர்  படுகாயமடைந்த நிலையில் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மேலும் அறியவருவதாவது, 

அக்கரைப்பற்றிலிருந்து நிந்தவூர் நோக்கி  சென்ற  மோட்டார் சைக்கிள், அதே திசையில் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளை கடந்து திடிரென சமிங்ஞை விளக்கின்றி வளைவொன்றில் திருப்ப முற்பட்டதனால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கால்  உடைந்த நிலையிலும் மற்றையவர் சிறு காயங்களுடனும்   வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

அத்துடன் விபத்து இடம்பெற்ற இடத்தில் மதுபான போத்தல் ஒன்று காணப்படுவதுடன் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிசார் செள்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும்  பாலமுனை வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட இருவரில் ஒருவர் நிந்தவூர் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மற்றையவர் கல்முனை பகுதியை சேர்ந்தவராவார்.