சீரற்ற காலநிலையால் இதுவரை 12 உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதும் பெய்த அடைமழையினால் 12 பேர் உயிரிழந்திருப்பதுடன், 5 பேர் காணாமல்போயுள்ளனர். 

இதேவேளை, 31,062 குடும்பங்களைச் சேர்ந்த 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  1300 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.