(ஆர்.விதுஷா)  

வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு முக்கிய  அங்கமாக பஸ்சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கான செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்று கொழும்பு, கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணத்துங்க  தலைமையில் இடம்பெற்றது.  

இந்த செயற்திட்டம் நாடு பூராகவும்  முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன் ஊடாக பஸ் விபத்துக்களை பெரும்பாலும் கட்டுப்படுத்த  முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், இதற்கான மருத்துவ பரிசோதனை நவீன உபகரணங்களை   பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனமொன்று வழங்கியுள்ளது. 

 

இந் நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்      இராஜாங்க அமைச்சர் அசோக்  அபேசிங்க,  அமைச்சின் செயலாளர்,  வீதிப் பாதுகாப்புக்கான தேசிய பேரவையின் தலைவர் வைத்தியர்  கோத்தாகொட மற்றும் கொழும்பு நகர வீதி ஒழுங்குப் பிரிவின்  பொலிஸ் அத்தியச்சர் இந்திக்க ஹப்புக்கொட உள்ளிட்ட    அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.