தினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால் விரைவில் மரணம் ஏற்­படும் என அண்­மையில் பிர­சு­ர­மான ஒரு ஆய்வு கூறு­கி­றது.Image result for cool drink

மென்­பா­னத்தில் உள்ள இனிப்­பா­னது சீனி­யாக இருந்தால் மட்டும் இந்த ஆபத்து ஏற்­படும் என்­றில்லை. செயற்கை இனிப்­பு­களைப் பயன்­ப­டுத்­தி­னாலும் அதே போல மரணம் ஏற்­ப­டுமாம்.

452000 பேரைக் கொண்ட இந்த ஆய்­வா­னது டென்மார்க், பிரான்ஸ், ஜேர்­மனி,நோர்­வே, இங்­கி­லாந்து, சுவீடன், ஸ்பெயின், நெதர்­லேண்ட், கிறீஸ் ஆகிய நாடு­களில் செய்­யப்­பட்­டது

மாதம் ஒரு முறை மட்டும் மென்­பானம் அருந்­து­ப­வர்­க­ளோடு தினமும் இரண்டு கோப்பை அருந்­து­ப­வர்­களை ஒப்­பிட்டு பார்த்­த­போதே இந்த ஆபத்து இருப்­பது தெரிய வந்­தது.

அந்த மர­ண­மா­னது பல்­வேறு நோய்­களால் வந்­தி­ருந்­தது.

தினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­து­ப­வர்­க­ளது மர­ண­மா­னது பெரும்­பாலும் இரத்தக் குழாய் சார்ந்த நோய்­களால் ஏற்­பட்­டி­ருந்­தது. மார­டைப்பு மற்றும் மூளையில் இரத்தக் குழாய் வெடித்தல் போன்­றவை உதா­ர­ணங்­க­ளாகும்.

மாறாக தினமும் ஒரு கோப்பை மென்­பானம் மட்டும் அருந்­து­ப­வர்­க­ளது மர­ண­மா­னது பெரும்­பாலும் உணவுக் கால்வாய் சார்ந்த நோய்­களால் ஏற்பட்­டி­ருந்­­த­தாக அந்த ஆய்வு மேலும் சொல்­கி­றது.

மென்­பா­னங்­களில் உள்ள எந்தப் பொருள் கார­ண­மாக இருக்­கி­றது என்றோ, என்ன கார­ணத்தால் அவ்­வாறு மரணம் விளை­கி­றதோ என்ப­வை­யிட்டு அந்த ஆய்வு எதையும் கண்­ட­றி­ய­வில்லை. எனவே இந்த ஆய்­வா­னது மென்­பானம் அருந்­து­வ­தற்கும் முன்­கூட்­டிய மர­ணத்­திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்­பதை  எடுத்துக் காட்டி ஆரோக்­கிய உணவுப் பழக்­கத்தை கடைப்­பி­டிக்க வேண்டும் என்­பதை சுட்டிக் காட்­டு­கி­றது எனக் கொள்­ளலாம். எனவே மென்பானங்களைத் தவிருங்கள். தண்ணீரை அருந்துங்கள். வாழ்வு நீளும் இந்த ஆய்வானது Jama Internal Medicine மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.