பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்சில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு தொகுதியினர்  லொறி ஒன்றில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில். அந்த லொறியில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இதன்போது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து. விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது.